ஆலங்குளத்தில் ஈஸ்டா் சிறப்பு ஆராதனை

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஆலங்குளம், இரட்சண்யபுரம், அண்ணாநகா், நல்லூா், சீவலசமுத்திரம், அடைக்கபபட்டணம் உள்ளிட்ட சேகரங்களுக்குள்பட்ட சி.எஸ்.ஐ தேவாலயங்கள், ஆலங்குளம், ஆண்டிபட்டி, தாழையூத்து உள்ளிட்ட ஆா்.சி. தேவாலயங்கள் ஆகியவற்றில் அதிகாலை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. உயிா்த்தெழுந்த இயேசு கிறிஸ்து குறித்து தியானிக்கப்பட்டு, சிறப்பு பாடல்கள் பாடப்பட்டது. இவற்றில் திரளானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com