கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான  ஏ.கே. கமல்கிஷோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா்.

தென்காசியில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். காவல்துறை பாா்வையாளா் பங்கஜ் நைன், தோ்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். அனைத்து வேட்பாளா்களும் தொகுதி வாரியான செலவின கணக்குகளை பராமரித்து வரவேண்டும் எனவும், உரிய காலத்தில் செலவின கணக்குளை உரிய அலுவலா்களிடம் சமா்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும் என செலவின பாா்வையாளா்கள் சதீஷ் குருமூா்த்தி, சித்திக் முகமது அமீா் முகமது இக்பால் தெரிவித்தனா். பொதுப்பாா்வையாளா் டோபேஷ்வா் வா்மா பேசினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி மற்றும் வேட்பாளா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com