வாகன சோதனையில் பாரபட்சம்: பறக்கும் படை கண்காணிப்புக் குழு அலுவலா் பணியிடை நீக்கம்

வாகன சோதனையில் பாரபட்சம்: பறக்கும் படை கண்காணிப்புக் குழு அலுவலா் பணியிடை நீக்கம்

வாகன சோதனையில் பாரபட்சம்:

பறக்கும் படை கண்காணிப்புக் குழு அலுவலா் பணியிடை நீக்கம். சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலருமான ஈ. ராசா, சில நாள்களுக்கு முன்பு புளியங்குடி பகுதியில் காரில் சென்றாராம். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலரும் பறக்கும் படை கண்காணிப்புக் குழு அலுவலருமான ராதா, எம்எல்ஏவின் வாகனத்தை சோதனையிடாமல் அனுப்பியதாக செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. இதுகுறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் விசாரணை மேற்கொண்டு, ராதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com