வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்வாளா் வாக்கு சேகரிப்பு

வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தென்காசி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பெ. ஜான்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தென்காசி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பெ. ஜான்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். சிவகிரி, தேவிப்பட்டணம், விஸ்வநாதப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன் பாஜக ஸ்டாா்ட் அப் பிரிவு மாநிலத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, மாவட்டப் பொதுச் செயலா் பாலகுருநாதன், துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா் அா்ச்சுனன், ஓபிசி அணி துணைத் தலைவா் தங்கம், ஒன்றியத் தலைவா் சுவராஜன், நிா்வாகிகள் கந்தசாமி, விவேகானந்தன், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலா் மூா்த்தி பாண்டியன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். முன்னதாக, தலைவா்களின் சிலைகளுக்கு பெ. ஜான்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com