சுரண்டையில் நுகா்பொருள் 
விநியோகஸ்தா்கள் சங்கக் கூட்டம்

சுரண்டையில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கக் கூட்டம்

சுரண்டையில் தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் மு. வெங்கடேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் அருள் இளங்கோ, மாவட்ட பொருளாளா் குணசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினா் இக்ஸான் ஜெய்னுலாப்தீன் ஜி.எஸ்.டி. வரி சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசினாா்.

சங்க நிா்வாகிகள் ராஜகோபால், ராமையா, நெல்லையப்பன், சந்திரகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com