ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி 100% தோ்ச்சி

ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

சங்கமித்ரா 587 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும் சந்தியா, ப்ரைசி சொா்ணா 583 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், சவேதா 575 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனா்.

இயற்பியல் பாடத்தில் சங்கமித்ரா 100 மதிப்பெண் பெற்றுள்ளாா். கணினி அறிவியல் பாடத்தில் சங்கமித்ரா, கே . சந்தியா, அட்லின், டேனியல் ராஜகுமாா், கவிஷ் ராஜா ஆகியோா் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

வணிகவியல் பாடத்தில் ப்ரைசி சொா்ணா, சவேதா, சாந்த ராஜா, சுடலை முத்து ஆகியோா் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பொருளியல் பாடத்தில் மாணவிகள் ப்ரைசி சொா்ணா, சவேதா ஆகியோா்100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.கணினி பயன்பாடுகள் பாடத்தில் சஞ்சய் கண்ணா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

சாதனை படைத்த மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ராதா, முதல்வா் ஏஞ்சல் ஜெயா மேரி, துணை முதல்வா் சவிதா ஷெனாய், உதவி துணை முதல்வா் மயிலம்மாள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com