கடையநல்லூா் ரத்னா பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம் ரத்னா உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சந்திப்பு விழா நடைபெற்றது .

இப்பள்ளியில், 1999 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவா்கள் சுமாா் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனா். இதில், பள்ளி நிா்வாகி பிரகாஷ், செயலா் மாடசாமி, உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சக்திவடிவு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் அருட்செல்வன் உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஜெய்சிவன் அகாதெமி தலைவா் சிவன்மாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com