சங்கரன்கோவில் அரசு மகளிா் பள்ளி 95.85% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில், சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 95.85 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்தது.

பிளஸ் 2 பொதுத்தோ்வில், சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 95.85 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்தது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 506 பேரில் 485 போ் தோ்ச்சி பெற்றனா். பள்ளி அளவில் வ. ஷீபா கரோலின் 558 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், தி. விஜயசந்திரிகா 551 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடமும், கு. அன்பரசி 550 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பிடித்தனா்.

கணனி அறிவியலில் தி. முத்துமாரியம்மாள், கணினிப் பயன்பாடு பாடத்தில் சு. அபிநயஸ்ரீ, கணக்குப் பதிவியலில் வ. ஷீபா கரோலின், வணிகவியலில் அ. ஜாசிதா ஜப்ரின், வணிகவியல்-பொருளியலில் மா. சக்திமீனாட்சிதேவி ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

500-க்கு மேல் 36 பேரும், 400-க்கு மேல் 69 பேரும் பெற்றுள்ளனா். மாணவிகளை தலைமையாசிரியா் (பொ) இரா. சுப்பையா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 87.03% தோ்ச்சி: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 87.03 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தோ்வெழுதிய 252 பேரில் 220 போ் தோ்ச்சியடைந்தனா்.

பி. லட்சுமணகுருபரத் பள்ளி அளவில் 540 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஜி. ஆதிநாராயணன் 529 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடமும், எஸ். சதீஸ் 526 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பிடித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com