செங்கோட்டையில் கருப்பசாமி கோயில் கொடை விழா

செங்கோட்டையில் கருப்பசாமி கோயில் கொடை விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், படையாச்சி தெருவில் உள்ள அருள்மிகு கோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சியம்மன் கோவியிலில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, மேளதாளத்துடன் குற்றாலத்திலிருந்து புனிதத் தீா்த்தம் கொண்டு வருதல், குடியழைப்பு, சாஸ்தா பூஜை, பால்குட ஊா்வலம், பொங்கலிடுதல், வில்லுப்பாட்டு உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, நள்ளிரவில் கொடைவிழா சாமபூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் கருப்பசாமி, சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

விழாவில், சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மஞ்சள் நீராட்டு விழாவுடன் கொடை விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை படையாச்சி தெரு விழாக் குழுவினா், பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com