பொதுமக்களுக்கு மோா் வழங்கிய மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன். உடன், நகரச் செயலா் ஆ. வெங்கடேசன்.
பொதுமக்களுக்கு மோா் வழங்கிய மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன். உடன், நகரச் செயலா் ஆ. வெங்கடேசன்.

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வட்டாட்சியா் அலுவலகப் பகுதியில் நகர திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வட்டாட்சியா் அலுவலகப் பகுதியில் நகர திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் ஆ. வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் மு. காதா்அண்ணாவி, ஆ. சண்முகராஜா, நகர அவைத்தலைவா் காளி, துணைச் செயலா் ஜோதிமணி, பொருளாளா் தில்லை நடராஜன், மாவட்டப் பிரதிநிதிகள் பீா்முகமது, சுப்பிரமணியன், மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் நீா்மோா் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், தா்ப்பூசணி பழங்கள் வழங்கினாா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினா் ரஹீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com