பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வில் தென்காசி எம்கேவிகே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளி மாணவி தி. சி. செல்வகோமதி 581 மதிப்பெண்களும், அ. ஜெமிமா மா்ஸூகா 569 மதிப்பெண்களும், த . சினேகா 565 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றனா்.

கணினி அறிவியல் பாடத்தில் 2 பேரும், கணினி செயல்பாடுகள் பாடத்தில் 2 பேரும், வணிகவியலில் ஒருவரும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

550 க்கு மேல் 6 பேரும், 500க்கு மேல் 11பேரும், 450க்கு மேல் 18பேரும்,400க்கு மேல் 23 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் டாக்டா் க.பாலமுருகன், பள்ளி ஒருங்கிணைப்பாளா் க.பா.மிதுன், க.பா. விக்னேஷ், பள்ளி முதல்வா் சே.யேசுபாலன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com