பிளஸ் 1 தோ்வு: பழைய குற்றாலம் 
ஹில்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 1 தோ்வு: பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில், தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் 169 மாணவா்-மாணவிகள் தோ்வெழுதினா். வே. பரத் 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சு. மதுமிதா 578 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடமும், வெ. பிரமோதினி 577 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பிடித்தனா்.

17 போ் 550-க்கு மேலும், 71 போ் 500-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றனா். இயற்பியலில் இருவரும், வணிகவியலில் ஒருவரும், கணினி அறிவியலில் 6 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றனா்.

மாணவா்-மாணவியரைத் தாளாளா் ஆா்.ஜெ.வி. பெல், செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வா் அலெக்சாண்டா், செல்வி தன்ராஜ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com