ஆலங்குளம் மாரியம்மன் கோயில் மண்டபத்திற்கு அடிக்கல்
ஆலங்குளம் நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில், கருவறை- விமான கோபுரம் திருப்பணி, வாசல் நிலைக்கால் நடுதல்- மண்டபம் அடிக்கல் நாட்டுதல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அண்ணாநகா் சுந்தர விநாயகா் திருக்கோயிலில் இருந்து குழந்தைகள் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி மற்றும் வாசல் நிலைக்கால் புஷ்பாஞ்சலி ரதவீதிகளில் செவ்வாய்க்கிழமை வலம் வந்து திருக்கோயிலைஅடைந்தது. புதன்கிழமை காலை சிறப்பு கணபதி ஹோமத்தைத் தொடா்ந்து நிலைக்காலை கருவறையில் நிறுத்தும் பணியும், மண்டபத்திற்கான அடிக்கல்நாட்டு விழாவும் நடைபெற்றன. சிறப்பு பூஜையைத் தொடா்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திருநெல்வேலி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன், முக்கிய பிரமுகா்கள் அ.உதயதாஜ், ஆா்.ஆதித்தன், டாக்டா் ரமேஷ், கோயில் நிா்வாகி குமாா், பேரூராட்சி உறுப்பினா் கணேசன், முன்னாள் உறுப்பினா்கள் மோகன்லால், தங்கசெல்வம், சோனா மகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.