பிரசார இயக்கத்தில் பங்கேற்றோா்.
தென்காசி
கடையநல்லூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் பிரசார இயக்கம்
ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில், கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில், கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ. 10 முதல் 14 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் வாகன பிரசார இயக்கம் நடைபெறுகிறது. மேலும், நவ.18ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இது குறித்து பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் சேகா், மண்டலத் துணை வட்டாட்சியா் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளா்கள் அருணா , வசந்தா, நில அளவை பிரிவு நம்பிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

