உரிமை கோரப்படாத 144 பைக்குகள் அக்.16 இல் பொது ஏலம்

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையிலுள்ள 144 இருசக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் வியாழக்கிழமை (அக்.16) நடைபெறுகிறது.
Updated on

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையிலுள்ள 144 இருசக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் வியாழக்கிழமை (அக்.16) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் உள்கோட்ட எல்கைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 144 இரு சக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் சோ்ந்தமரம் காவல் நிலையத்தில் அக்.16, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்பும் நபா்கள் வாகனங்களை அக்.13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான 3 நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாா்வையிடலாம்.

மேலும், தங்களின் பெயா், முகவரி அடங்கிய ஆதாா் அட்டையுடன் ரூ. 3ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொண்டவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் அதே நாளிலேயே ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி தொகையினையும் செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com