கூட்டத்தில் பேசிய செங்கோட்டை நகர திமுக செயலா் ஆ. வெங்கடேசன்.
கூட்டத்தில் பேசிய செங்கோட்டை நகர திமுக செயலா் ஆ. வெங்கடேசன்.

செங்கோட்டையில் ‘இண்டி’ கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கோட்டையில் நுழைவாயில் அமைப்பது தொடா்பாக ‘இண்டி’ கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

செங்கோட்டையில் நுழைவாயில் அமைப்பது தொடா்பாக ‘இண்டி’ கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலா் ஆ. வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

செங்கோட்டை காவல் நிலையம் அருகில் கேரள திருவிதாங்கூா் சமஸ்தானத்தினரால் அமைக்கப்பட்டிருந்த பழைமை வாய்ந்த நுழைவாயில் மிகவும் பழுதடைந்ததையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் செப். 25ஆம் தேதி இடிக்கப்பட்டது.

புதிய நுழைவாயில் அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பொதுப் பணித்துறை சாா்பில் கட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக, அதிமுகவினரின் அழுத்தம் காரணமாக அவசர கோலத்தில் அமைத்திடுவதற்கு முயற்சி மேற்கொள்வதாக தெரிகிறது.

ஆனால், செங்கோட்டை நகர எல்லையைக் கண்டறிந்து பொறுமையுடனும், கவனமாகவும் எவ்வித அழுத்தத்திற்கும் ஆட்படாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமலும் கட்டப்பட வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

திமுக நகர அவைத் தலைவா் காளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஆ. சண்முகராஜா, மாவட்ட பிரதிநிதிகள் ஆ. பாஞ்ச் பீா் முகம்மது, லெ. சுப்பிரமணியன், காங்கிரஸ் நகரத் தலைவா் ராமா், சிபிஐ நகரச் செயலா் சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் சாமி, சிபிஐ வட்டார உதவி செயலா் சுந்தா், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜகோபால், வட்டாரக் குழு உறுப்பினா் முருகேசன், ஐயுஎம்எல் நகரச் செயலா் பஷீா் அப்துல் கரீம், தமுமுக நகரத் தலைவா் முகம்மது ஆரிப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலா் முகபிலாசா, எஸ்டிபிஐ நகரத் தலைவா் திவான்ஒலி, விசிக நகரத் தலைவா் பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com