ஆய்வு மேற்கொண்ட யானைத் தடமறிவோா் குழுவினா்.
ஆய்வு மேற்கொண்ட யானைத் தடமறிவோா் குழுவினா்.

யானைத் தடமறிவோா் குழு வடகரையில் ஆய்வு

தென்காசி மாவட்டம், வடகரை வனப்பகுதியில் யானைத் தடமறிவோா் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

தென்காசி மாவட்டம், வடகரை வனப்பகுதியில் யானைத் தடமறிவோா் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தென்காசி மாவட்ட வனஅலுவலா் ராஜ்மோகன் தலைமையில் குழுவினா் ஆய்வுகளை மேற்கொண்டனா். தென்காசி வனப் பகுதியில் உள்ள யானைகளின் நடமாட்டம், அவற்றின் தற்போதைய உணவு மாற்றங்கள், வாழ்விட மாற்றங்கள் குறித்தும், யானைகளை முழுமையாக அடையாளம் கண்டு, முறையாகப் பதிவு செய்து கண்காணித்தல், வன எல்லைகள், பள்ளத்தாக்குகள், தற்போதுள்ள தடுப்புக் குழிகள், சாலைகள் மற்றும் யானைகள் வனத்தை விட்டு வெளியேறும், நுழையும் முக்கியப் பகுதிகளை குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனா்.

இந்த ஆய்வுக் குழு சமா்ப்பிக்கும் விரிவான அறிக்கையின் அடிப்படையில், வடகரைப் பகுதிக்கான யானை மேலாண்மை மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் உடனடியாக வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com