சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

    By திருநெல்வேலி  |   Published on : 01st December 2013 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு சனிக்கிழமை தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

    திருநெல்வேலி மாநகர மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணி மாவீரன், குழந்தைகளின் தாயிடம் இந்த தங்க மோதிரங்களை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து கட்சியினர் இருவர் தங்களது உடல் களை தானம் செய்வதாக உறுதிமொழிப் பத்திரம் அளித்தனர்.

    மேலும், சிலர் ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட இணைச் செயலர் பி. கண்ணன், மாவட்ட இளைஞரணிச் செயலர் கிங்தேவேந்திரன், பாளையங்கோட்டை பகுதிச் செயலர் பெருமாள் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai