சுடச்சுட

  

  ஆன்-லைனில் மின்கட்டணம்: பொதுமக்களுக்கு அறிவுரை

  By திருநெல்வேலி  |   Published on : 01st December 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கான மின் கட்டணத்தை ஆன்-லைன் முறையில் செலுத்துமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:

  திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட பயனீட்டாளர்கள் தங்களது அலைபேசி எண்களை தொடர்புடைய மின்பொறியாளர் அலுவலகத்தில், மின் இணைப்பு எண்ணுடன் சேர்த்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவு செய்யும் மின்நுகர்வோர்களுக்கு அவர்களது மாதாந்திர மின் கட்டணம், கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, மின் பயனீட்டு அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் தெரியப்படுத்தப்படும். மேலும், மின்வாரிய அலுவலகங்களில் வந்து செல்லும் அலைச்சலைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசல் இன்றி இருந்த இடத்திலேயே மின் கட்டணத்தைச் செலுத்த ஆன்-லைன் முறையிலும் பணம் செலுத்தும் வசதி உள்ளது. திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai