சுடச்சுட

  

  திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இந்து முன்னணி பயிற்சி முகாம் நடைபெற்றது.

  திருநெல்வேலி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, மாநகர் மாவட்டத் தலைவர் டி. பாலாஜிகிருஷ்ணசுவாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வேல்ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சட்டநாதன், எஸ். துரைராஜ் முன்னிலை வகித்தனர்.

  அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் மூர்த்தி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கா. குற்றாலநாதன், தச்சநல்லூர் மண்டல துணைத் தலைவர் கே. சங்கர், தச்சை மண்டல பொதுச்செயலர் வெற்றிவேல், செயலர்கள் எம். நம்பிராஜன், ஜி. இசக்கிராஜன், துணைத் தலைவர் எஸ். மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  தச்சை மண்டல பசுத்தாய் பொறுப்பாளராக குருசாமி, 7-வது வட்டத் தலைவராக கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai