சுடச்சுட

    

    இரட்டைக் கொலை நடந்த இடத்தில் மற்றொரு சம்பவம் வெட்டுக் காயங்களுடன் வந்து டி.ஐ.ஜி. முன் விழுந்த தொழிலாளி

    By அம்பாசமுத்திரம்,  |   Published on : 01st December 2013 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பாசமுத்திரத்தில் இரட்டைக் கொலை தொடர்பாக விசாரணை நடத்திக்கொண்டிருந்த டி.ஐ.ஜி. முன் வெட்டுக் காயங்களுடன் வந்து விழுந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

    அம்பாசமுத்திரத்தில் சனிக்கிழமை மாலை டாக்டர் அருளும், அவரது மனைவியும்  கொலை செய்யப்பட்ட வீட்டை டி.ஐ.ஜி. சுமித்சரண் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் காப்பாற்றுமாறு கூக்குரல் இட்டவாறு ரத்தக் காயத்துடன் ஓடிவந்து டி.ஐ.ஜி. முன் விழுந்தார். அவரது உடலில் வெட்டுக் காயம் இருந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையில், அவர் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசத்தைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் (53) என்பதும், முன்விரோதம் காரணமாக அவர் அரிவாளால் வெட்டப்பட்டதும் தெரியவந்தது. இசக்கிப்பாண்டிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (48) என்பவருக்கும்  இடையே விரோதம் இருந்துவருகிறதாம். இருவர் மீது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பழைய பகை காரணமாக இசக்கிப்பாண்டியனை முத்துப்பாண்டி ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். டாக்டர் அருள் கொலை செய்யப்பட்ட தெற்கு மாடத் தெருவுக்கு அடுத்த வடக்கு ரதவீதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து வெட்டுக்காயத்துடன் இசக்கிப்பாண்டியன் ஓடிவந்து டி.ஐ.ஜி. முன் வந்து விழுந்துள்ளார். இதையடுத்து, இசக்கிப்பாண்டியனை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai