Enable Javscript for better performance
இளைஞர்களுக்கு எளிய நடைமுறையில் தொழில்கடன்- Dinamani

சுடச்சுட

    

    இளைஞர்களுக்கு எளிய நடைமுறையில் தொழில்கடன்

    By திருநெல்வேலி,  |   Published on : 01st December 2013 05:41 AM  |   அ+அ அ-   |    |  

    : பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அரசியல் விழிப்புணர்வு இளைஞர் மாநாட்டில், இளைஞர்களுக்கு எளிய நடைமுறையில் தொழில்கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் நிறுவனர் தலைவர் பெ. ஜான்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். கட்சியின் பொதுச்செயலர் பிரிசில்லாபாண்டியன் கருத்துரை ஆற்றினார். மாநில பொதுச்செயலர் அய்யாத்துரைபாண்டியன், துணைப் பொதுச்செயலர்  நல்லுசாமி, மாநில பேச்சாளர் எட்வின் ஆகியோர் பேசினர். மாநாட்டுக்குமாநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர்  கணேசபண்ணையார் தலைமை வகித்தார். செயலர் கிங் தேவேந்திரன், மாநகர்  மாவட்டத் தலைவர் அந்தோனிஅன்பரசன், செயலர் கண்மணி மாவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலர் நெல்சன் வரவேற்றார்.

    தீர்மானங்கள்: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு  சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோபாலசமுத்திரம், சுத்தமல்லி போன்ற ஊர்களில் நிகழ்ந்த படுகொலை குறித்து  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு எளிய நடைமுறையில் சுயதொழில் கடன் வழங்க வேண்டும்.மாஞ்சோலை போராளிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் துரைப்பாண்டியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai