சுடச்சுட

  

  சமூக அறிவியல் ஆராய்ச்சி பயிலரங்கம் நிறைவு

  By திருநெல்வேலி  |   Published on : 01st December 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவிலான சமூக அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி குறித்த பயிலரங்கம் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

  தேசிய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிதி உதவியுடன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த துறையில் முனைவர் பட்டம் பெறும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆராய்ச்சி பயிலரங்கம் நவ. 20- ம் தேதி தொடங்கி 10 தினங்கள் நடைபெற்றது.

  பயிலரங்கில் ஆராய்ச்சி அறிமுகம், ஆராய்ச்சி வகைகள், ஆராய்ச்சி வடிவமைப்பு, வடிவமைப்பு வகைகள், மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  புதுச்சேரி, நாக்பூர், தமிழ்நாடு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இப்பயிலரங்கில் தமிழ்நாடு, கர்நாடகம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் 40 பேர் பங்கேற்றனர்.

  பல்கலைக்கழக சென்ட் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் பி. தமிழ்செல்வம் தலைமை வகித்தார். கல்வியியல் துறை துணைப் பேராசிரியர் டி. ரமேஷ் வரவேற்றார். துணைப் பேராசிரியை ஆர். தீபா அறிக்கை வாசித்தார்.

  சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரி ஆராய்ச்சிக் குழுத் தலைவரும், இயக்குநருமான எஸ்.ஜெ. வின்சென்ட்சேகர் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் புதிய தலைப்புகளை தேர்வு செய்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

  பல்கலைக்கழக தொடர்கல்வித் துறை இயக்ககத்தின் இயக்குநர் ம. சௌந்தரபாண்டியன், நிதி அலுவலர் லெ. முத்துபாண்டி வாழ்த்திப் பேசினர். பயிற்சி குறித்து ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பல்கலைக்கழக கல்வித்துறை துணைப் பேராசிரியர் ரெ. செல்வராசு நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai