சுடச்சுட

  

  நெல்லையில் டிசம்பர்14 வரை ஆர்ப்பாட்டம், பேரணிகளுக்கு போலீஸ் தடை

  By திருநெல்வேலி,  |   Published on : 01st December 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகரில் வரும் 14-ஆம் தேதி வரையில் ஆர்ப்பாட்டம்,  பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருநெல்வேலி சரக டிஐஜி சுமித் சரண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  மாநகர காவல் சட்ட விதிகளின்படி திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களின்  அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் கருத்தில்கொண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 14 வரையில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே, மாநகரில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்னா உள்ளிட்டவற்றை அனுமதியின்றி நடத்தக் கூடாது. அனுமதியின்றி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி எச்சரித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai