சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கு மரங்களை அடையாளம் காணும் போட்டி

  By திருநெல்வேலி  |   Published on : 01st December 2013 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவின் முதல் தாவரவியல் விஞ்ஞானி என போற்றப்படும் ஜே.சி. போஸ் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மரங்களை அடையாளம் காணும் போட்டி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

  திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், தேசிய அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து ஜே.சி. போஸ் பிறந்தநாள் விழாவை அறிவியல் மையத்தில் சனிக்கிழமை கொண்டாடின. விழாவின் ஒரு பகுதியாக மரப் பட்டைகளை பார்த்து மரங்களின் வகைகளை அடையாளப்படுத்தும் போட்டி நடைபெற்றது.

  இதில், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 14 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், மரங்களின் வகைகளை சரியாக அடையாளப்படுத்தி முதல் பரிசை புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர் பி. மகிழன் பெற்றார். இலஞ்சியில் உள்ள பாரத் மான்டிசோரி பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர் முகமது ஷேக் பயீத் பெற்றார். இதேபோல, 3-வது பரிசை புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர் அஜீத் சீதாபதி பெற்றார்.

  இதைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் நவீன விஞ்ஞானி ஜே.சி. போஸ் எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் பிரிவு விரிவுரையாளர் பி. ரவிச்சந்திரன் சொற்பொழிவாற்றினார். விஞ்ஞானி ஜே.சி போஸ் செய்த ஆய்வுகள், சாதனைகள், அவரால் தாவரவியல் உலகுக்கு கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். விலங்குகளின் மரபணுக்களை எடுத்து தாவரங்களில் புகுத்துவதன் மூலம் பல்வேறு குணங்களைப் பெறலாம் என்பதை விஞ்ஞானி போஸ் உறுதிபடுத்தியிருப்பதையும் எடுத்துக் கூறினார்.

  நிகழ்ச்சியில், மாவட்ட அறிவியல் மைய அதிகாரி டி. சீதாராம் வரவேற்றார். கல்வி உதவியாளர்கள் பி. மாரி லெனின், என். பொன்னரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai