சுடச்சுட

  

  பாளை.யில்புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

  By திருநெல்வேலி,  |   Published on : 01st December 2013 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் மாரியப்பன் (27). இவருக்கு டிச. 12ஆம்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் தூங்கச் சென்றவர் சனிக்கிழமை காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.

  இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அறைக் கதவை திறந்து உள்ளே சென்றபோது மாரியப்பன் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  திருமணம் பிடிக்காததால் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதேனும் காரணமா எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக, பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai