சுடச்சுட

    

    மாணவர்களை போராட தூண்டுவோர் மீது நடவடிக்கை

    By திருநெல்வேலி,  |   Published on : 01st December 2013 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களைப் போராட்டத்துக்கு தூண்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய யோவான் கல்லூரி பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பணி

    நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவகாரம் தொடர்பாக கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் கடந்த மாதம் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் கல்லூரி நிர்வாகத்துக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கல்லூரியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதன்படி, கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.ஏ. மறைக்குமார் செல்லராஜ் வரவேற்றார்.

    தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி மண்டலப் பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ் பேசியது:

    மாணவர்கள் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது அவர்களையே ஏமாற்றிக் கொள்வதாகும். ஒழுங்கீன நடவடிக்கையால் மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக ஸ்டிரைக் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் குறைகளை எடுத்துக் கூறி அதற்கு தீர்வு காண வேண்டும். கல்லூரிப் பருவத்தில் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் கடமையாகும். எனவே, அத்தகைய பெற்றோரும், ஆசிரியரும் ஒருங்கிணைந்து மாணவர்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    பேராசிரியர்கள் செல்வின்சாமுவேல், ஜான்கென்னடி, கிங்ஸ்லி எர்னஸ்ட், அமீஸ் ஆபிரகாம், கிருபாகரன் ஆகியோர் பேசினர். பெற்றோர் -ஆசிரியர் கழக உதவித் தலைவர் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் அருள் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.

    பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    மாணவர்களை போராட்டத்துக்குத் தூண்டும் ஆசிரியர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களது அகமதீப்பீடு, வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாதந்தோறும் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டும். கல்லூரியும், கல்லூரி நிர்வாகமும் அமைதியான முறையில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் செயல்படும் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை நல் வழிப்படுத்தவும், கல்வியில் மேம்படவும் மாலைநேர பயிற்சி வகுப்புகளை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai