சுடச்சுட

    

    மாவட்ட பூப்பந்துப் போட்டி: மேலப்பாளையம் அணிக்கு சுழற்கோப்பை

    By திருநெல்வேலி,  |   Published on : 01st December 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட அளவில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இடையிலான பூப்பந்துப் போட்டியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்று சுழற்கோப்பையை வென்றது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணி செய்து வரும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் பங்கேற்ற இப்போட்டி மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் 2 தினங்கள் நடைபெற்றது. போட்டியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வள்ளியூர், சுரண்டை உள்பட 12 பள்ளி அணிகள் பங்கேற்றன. இப் போட்டியை வியாழக்கிழமை டாக்டர் ஜவாஹர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி அணியும், தெற்குகள்ளிகுளம் புனித அலாசியஸ் மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடின.

    நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப் போட்டியில் மேலப்பாளையம் அணி முதலிடம் பெற்று சுழற்கோப்பையை வென்றது. புனித அலாசியஸ் மேல்நிலைப் பள்ளி அணி 2 வது இடமும், பாளையங்கோட்டை புனித யோவான் மேல்நிலைப் பள்ளி

    3 -வது இடமும், சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளி 4- வது இடமும் பெற்றன.

    இதையடுத்து நடைபெற்ற விழாவில் வெற்றி அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எம்.ஏ.ஏஸ். முகம்மதுஅபுபக்கர் வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ஆர். ரமேஷ்ராஜா, டாக்டர் ஜவாஹர் ராஜ்குமார்,பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.கே. ஷேக்முகம்மது, தமிழாசிரியர் ஹசன், திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டிக் கழகத் துணைத் தலைவர் வி.எஸ்.டி. அப்துல்காதர், மேலப்பாளையம் விளையாட்டு அகாதெமி தலைவர் வி.எஸ்.டி. அமானுல்லா, புதுமனை கொத்பா பள்ளி நிர்வாகத் தலைவர் வி.ஏ. நெய்னா முகம்மது வாழ்த்தி பேசினர்.

    உடற்கல்வி ஆசிரியர் கே.ஏ.சாகுல்ஹமீது வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் எஸ். மைதீன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai