சுடச்சுட

  

  வாசகர் வட்டம் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

  By திருநெல்வேலி  |   Published on : 01st December 2013 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி நகரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற விழாவில், வாசகர் வட்டம் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  மகாகவி பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் கூட்டம், நூலக வார விழா, குழந்தைகள் தினவிழா கந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் ராஜேந்திரன், சந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  வாசகர் வட்டச் செயலர் வை. சிவசங்கரன், ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி தமிழாசிரியர்  சுந்தரமகாலிங்கம், சுவாமிநாதன், உக்கிரன்கோட்டைமணி, நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பொருனை பாலு வரவேற்றார். நூலகர் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai