சுடச்சுட

    

    சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மொபட்டில் சென்ற வியாபாரி இறந்தார்.

    சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் சொ.பால்ராஜ் (64). ஜவுளி வியாபாரியான இவர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல தனது மொபட்டில் வியாபாரம் செய்ய சென்றாராம்.  சுரண்டை - ஆனைகுளம் சாலையில் அரசு கல்லூரி பஸ் நிறுத்தத்திற்கு அருகேயுள்ள திருப்பம் ஒன்றில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், சாலையோரம் உள்ள பள்ளத்தில் மொபட் கவிழ்ந்தது. பலத்த காயமடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகலறிந்த சுரண்டை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai