சுடச்சுட

    

    கங்கைகொண்டானில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு

    By திருநெல்வேலி,  |   Published on : 02nd December 2013 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியையடுத்த கங்கைகொண்டானில் தண்டவாளம் அருகே கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

    கங்கைகொண்டான் சிற்றாற்று பாலத்தில் தண்டவாளம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும் திருநெல்வேலி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாகக் கிடந்தவர் ஆரஞ்சு மற்றும் ரோஸ் நிறத்தில் பனியனும், லுங்கியும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai