Enable Javscript for better performance
தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

    By திருநெல்வேலி  |   Published on : 02nd December 2013 03:32 AM  |   அ+அ அ-   |    |  

    மின்வெட்டைப் போக்க தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என, அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

    இந்த அமைப்பின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மாநில பொதுச்செயலர் கே. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் வி.சி. சேகர், துணைப் பொதுச்செயலர் வாசு. செல்வம், கொள்கைப் பரப்புச்  செயலர் செந்தட்டிபுரம் கணேசன், தலைமை நிலையச் செயலர் நயினார்பாண்டியன், மாநகர் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பேச்சிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைப் போக்கும் வகையில் கூடங்குளத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரம் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். மூர்த்திக்கு அதிகாரம் வழங்குவது,

    முதல் மாநாட்டை திருநெல்வேலியில் வரும் 2014-பிப்ரவரியில்  நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai