சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள் கூட்டம், மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் பிர்தவ்ஸி முன்னிலை வகித்தார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து உயர்த்தக் கோருவது. ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இக் கூட்டத்தில் மாநிலச் செயலர் யூசுப்அலி, மாவட்டத் தலைவர் செய்யதுஅலி, பைசல், நேஷனல் சாஹுல், ஷேக்அன்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai