சுடச்சுட

  

  வாசுதேவநல்லூர் மற்றும் மூன்றடைப்பு பகுதியில் மணல் கடத்தியதாக, மூன்று பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 2 மாட்டுவண்டிகள்,1 மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.

  வாசுதேவநல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் போலீஸார், தென்காசி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மாட்டுவண்டிகளை சோதனையிட்டபோது, அதில் ராப்பைக்குளத்திலிருந்து மணலை கடத்திச் சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து, 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை ஓட்டிவந்த சங்கனாப்பேரி, பாடசாலைத் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் வீரகுமார், வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியைச் சேர்ந்த பக்கிரி மகன் கருத்தபாண்டி ஆகியோரைக் கைதுசெய்தனர்.

  வள்ளியூர்: மூன்றடைப்பு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மூன்றடைப்பு அருகே ஆற்று மணலுடன் மினிலாரி வருவதைப் பார்த்து அதனை தடுத்து நிறுத்தினர்.

  உடனே அதிலிருந்த சிங்கிகுளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகன், பானான்குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், சுந்தர், செல்வன், வேல்பாண்டி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனராம். இதையடுத்து லாரியை ஓட்டிவந்த சுப்பையா மகன் சின்னத்துரை(29)யை போலீஸார் கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்திய மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக  உதவி ஆய்வாளர் ராபர்ட் வழக்குப் பதிந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai