சுடச்சுட

  

  : தபால் தந்தி மற்றும் மத்திய அரசு ஓய்வூதியர் சங்க செயற்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் சி.செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.பேச்சிமுத்து, செயலர் எஸ்.என்.சுப்பையா உள்ளிட்டோர் பேசினர்.

   பொதுத்துறை நிறுவனங்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைப்பது போன்று மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கும் மாற்றியமைக்கப்பட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். மருத்துவ அலவுன்சை ரூ. 2000 ஆக அதிகரிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் 65 வயதிலிருந்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai