சுடச்சுட

    

    முக்கூடல் அருகே முயல் வேட்டையாடியதாக வனத்துறையினர் நான்கு பேரை கைது செய்தனர்.

    முக்கூடல் அருகே உள்ள விளை நிலங்கள் மற்றும் தோட்டங்களில் நாய்களை வைத்து முயல் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு பல புகார்கள் வந்தன.

    இதையடுத்து அம்பாசமுத்திரம்  வனச்சரகர் பாவேந்திரன் மற்றும் வனத்தடுப்புக் காவலர்கள்  முக்கூடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பேட்டை அருகே இரண்டு மோட்டார் பைக்குகளில் இரண்டு வேட்டை நாய்களுடன் வந்த நான்கு பேரிடம் வனத்துறையினர் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் ராமையன்பட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் தினகரன், முருகன் மகன் ராஜா, திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் இசக்கிபாண்டியன், முகமது அலி மகன் ரியாஸ்,என்பதும், இந்நான்கு பேர்களும் முக்கூடல் பகுதியில் தொடர்ந்து முயல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரியவந்ததையடுத்து. வனத்துறையினர் நால்வரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai