சுடச்சுட

    

    மேலப்பாளையத்தில்ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தொடக்கம்

    By திருநெல்வேலி  |   Published on : 02nd December 2013 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலப்பாளையத்தில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.

    சங்கத்தின் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக எம்.சேக்மைதீன், செயலராக கே.நாகூர்மீரான், துணைத் தலைவராக எம்.கே.முகமதுபாரூக், பொருளாளராக ஏ.அலி பைரோஸ், செயற்குழு உறுப்பினர்களாக வி.முருகன், ஆர்.சுரேஷ், எஸ்.பஷீர், சிந்தாபாய், ரஷீத், இப்ராஹிம், முகப்பத் அலி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    பேட்ஜ் பெறுவதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் விதியை தளர்த்த வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலப்பாளையம் பகுதி சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai