சுடச்சுட

    

    169 ஏக்கர் பள்ளிவாசல் நிலத்தை மீட்கப் போராட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 02nd December 2013 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், பள்ளிவாசலுக்குச் சொந்தமான 169 ஏக்கர் நிலத்தை மீட்கத் தொடர் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலர் பாட்டபத்து பாஷா  தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணிச் செயலர் அலிம்சலீம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலத் தலைவர் பாளை. எஸ். ரபீக் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாவட்டத் தலைவர் இம்தியாஸ் மீரான், மாவட்டப் பொருளாளர் அஜ்மல், மாவட்ட செய்தி தொடர்பாளர் மஸ்தான், மாவட்ட துணைத் தலைவர் ஜான்பாய்,  மாவட்ட துணைச் செயலர் தாழைஉமர், பத்தமடை ஜெய்லானி, மேற்கு மாவட்டத்  துணைத் தலைவர் சங்கைசெய்யது, மாவட்ட தொண்டரணிச் செயலர் யூனூஸ்,  மாவட்ட மருத்துவரணிச் செயலர் பேட்டை மைதீன், மாணவரணிச் செயலர் முஸ்தபா, துணைச் செயலர் தச்சை சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    டிச. 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் போராட்டம் நடத்துவது,  பேட்டை நவாப் வலாஜா பள்ளிவாசலுக்குச் சொந்தமான 169 ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த நிலத்தை மீட்கத் தொடர் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai