சுடச்சுட

  

  ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நூதன ஆர்ப்பாட்டம்

  By திருநெல்வேலி  |   Published on : 03rd December 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில், பாஜகவினர் கண்களில் கருப்புத் துணி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  போலி பட்டா தயாரித்து நில மோசடியை உருவாக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது. குலவணிகர்புரம் கிராமத்தில் பெருமாள்புரம் எஸ்.டி.சி. கல்லூரி அருகில் 20 சென்ட் நிலத்தை பாரதிய ஜனதா கட்சி குத்தகை பெற்றுள்ளது. இந்த நிலத்துக்கு புதிய  உள்பிரிவு எண் ஏற்படுத்தி பட்டா தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

  ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலர் எஸ். கார்த்திக் நாராயணன், மாவட்டப் பொதுச்செயலர் எஸ்.வி. குருசாமி, மாவட்ட துணைத் தலைவர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  காவல் நிலையங்களில் புகார் கொடுப்பவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்படுவதாகப்  புகார் தெரிவித்து, தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்க மாநில இளைஞரணி அமைப்பாளர் தி. தேவேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai