சுடச்சுட

  

  ஊதிய பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்தி தொமுச ஆர்ப்பாட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 03rd December 2013 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொமுச சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 10 சதவிகித டி.ஏ. நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 240 நாள்கள் பணி செய்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

  பஸ்களில் வசூல் அதிகரிக்க வேண்டும். டீசல் செலவை குறைக்க வேண்டும் என தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும் வண்ணார்பேட்டை தாமிரவருணி பணிமனை முன்பு திமுக சார்பு அமைப்பான தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் இரா. முருகேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஏ. தர்மன்  முன்னிலை வகித்தார். தொமுச அமைப்புச் செயலர் மாஞ்சோலை மைக்கேல்,  நிர்வாகிகள் நெல்சன், மகாவிஷ்ணு, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai