சுடச்சுட

    

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் தெ.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர்  சீதாலட்சுமி வரவேற்றார். ஒன்றிய துணைத் தலைவர் பி.சுசீலா, எஸ்.என். முருகன், எஸ்.கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்  ஏ.சுப்புலட்சுமி, மாநில துணைத் தலைவர் வி.சங்கரவடிவு, மாவட்ட இணைச் செயலர் எம்.ஆறுமுகம், சிவஞானம் ஆகியோர் பேசினர்.

    5 ஆண்டுகள் பணிமுடித்த உதவியாளர்களுக்கு, சமையலராக பதவிஉயர்வு வழங்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகத்தின் தலையீட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு சிறப்பு சேமநலநிதியும், ஒட்டுமொத்த ஓய்வூதிய நிதியும் உடனே வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    ஒன்றியச் செயலர் ஏ.ஜூலியட், முத்தம்மாள், லட்சுமி, ராஜேஸ்வரி, செல்லம்மாள், பிச்சையா, மீனாட்சிஅம்மாள், வேலம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai