சுடச்சுட

  

  திருநெல்வேலி நகரம் உள்ளிட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் ஏ.பி.சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

  அதன்படி திருநெல்வேலி நகரம், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai