சுடச்சுட

    

    திருநெல்வேலி நகரம் அருகே கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    திருநெல்வேலி நகரம், பாட்டப்பத்து அருகேயுள்ள தேவிபுரத்தில் கோயிலில் சூறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஒரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீதும் திருநெல்வேலி நகரம் போலீஸார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில், அப் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் மனைவி வள்ளியம்மாள் (45), பெருமாள் மனைவி லட்சுமி (52), சுதந்திரநாதன் மகன் சுந்தர் (30), ராமச்சந்திரன் மனைவி மாலதி (42) ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai