சுடச்சுட

  

  நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: பாபநாசம் அணையில் அதிகபட்சம் 63 மி.மீ

  Published on : 03rd December 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணையில் அதிகபட்சம் 63 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

  மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக பாபநாசம் அணையில் 63 மி.மீ. மழை பதிவானது.

  பிற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு அணை 20, மணிமுத்தாறு அணை 21.4, கடனாநதி அணை 6.8, ராமநதி அணை 61.50, கருப்பாநதி அணை 6, குண்டாறு அணை 9, வடக்குப் பச்சையாறு  அணை 11.6, கொடுமுடியாறு அணை 20, அடவிநயினார் அணை 4, பாளையங்கோட்டை 5.2, திருநெல்வேலி 2, நான்குனேரி 16, வீரகேரளம்புதூர் 4, ஆலங்குளம் 5, சங்கரன்கோவில் 31, செங்கோட்டை 31, ராதாபுரம் 8.2, சிவகிரி 3, ஆய்க்குடி 32.6, சேரன்மகாதேவி 4, அம்பாசமுத்திரம் 15.2. பாபநாசம் அணை நீர்மட்டம் 95.30 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 104.07 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 70.30 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 69 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 61.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61.68 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 9.00 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 9.84 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 24.00 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 118.00 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு நொடிக்கு 1112.73 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 202 கனஅடியும், கடனாநதி அணைக்கு 136.42 கனஅடியும், ராமநதி அணைக்கு 45 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு 25 கனஅடியும், கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளுக்கு தலா 14 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்தும் அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai