சுடச்சுட

  

  திருநெல்வேலி பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  திருநெல்வேலி பேட்டை ஆதம்நகரைச் சேர்ந்தவர் அப்துல்வகாப் (62). இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள வீட்டில் வசித்து வரும் அப்துல்வகாப், வாரத்தில் ஒரு நாள் மட்டும் பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துசெல்வாராம்.

  இந்நிலையில், அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. நகைகள் அப்படியே இருந்தன.

  தகவலறிந்ததும் அப்துல்வகாப் பேட்டைக்கு வந்தார். அவர், பாதுகாப்பு கருதி கவரிங் நகைகளை மட்டுமே வீட்டில் வைத்திருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார். இருப்பினும் திருட்டில் ஈடுபட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai