சுடச்சுட

    

    வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

    By திருநெல்வேலி,  |   Published on : 03rd December 2013 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் திருநெல்வேலி தாமிரவருணி பணிமனை முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் எஸ்.பெருமாள், நிர்வாகிகள் பி.முத்துகிருஷ்ணன், சி.மணி. எஸ்.வீரராமன், எம்.சண்முகம் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 10 சதவிகித அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    ஊழியர்களுக்கு சீருடைகளையும், பஸ்களுக்கு தரமான உதிரிபாகங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai