சுடச்சுட

    

    அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும்: ஆட்சியர்

    By dn  |   Published on : 04th December 2013 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, டிச.3:÷திருநெல்வேலி மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து விளம்பரப் பலகைகளையும் வியாழக்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியர் மு.கருணாகரன் கெடு விதித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது, திருநெல்வேலி மாநகராட்சிக்கு எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அரசாணைகளுக்கு முரணாகவும், அரசு அனுமதியின்றியும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

    அரசு அனுமதியின்றி நிறுவப்பட்ட பலகைகளை அந்தந்த விளம்பரதாரர்களே முன்வந்து வியாழக்கிழமைக்குள் அகற்ற வேண்டும். தவறினால் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்படும்.

    மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து விளம்பரப் பலகைகள் அகற்றப்படும்.

    இதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்படும்போது பலகைகளுக்கு சேதம் ஏற்பட்டால் அரசு பொறுப்பு ஏற்க முடியாது. எனவே, அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார் அவர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai