Enable Javscript for better performance
அரிகேசவநல்லூர் இளைஞர் நெல்லை அருகே வெட்டிக்கொலை- Dinamani

சுடச்சுட

    

    அரிகேசவநல்லூர் இளைஞர் நெல்லை அருகே வெட்டிக்கொலை

    Published on : 04th December 2013 05:52 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி மாவட்டம்,  அரிகேசவநல்லூரைச் சேர்ந்த இளைஞர்  தருவையில் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    தருவையில் உள்ள வாய்க்கால் படித்துறையில் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக முன்னீர்பள்ளம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

    முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவாஹர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் பா.மணிமாறனும் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.

    போலீஸாரின் விசாரணையில், சடலமாகக்கிடந்தவர் வீரவநல்லூர் அருகேயுள்ள அரிகேசவநல்லூரைச் சேர்ந்ததுரை மகன் முத்துசாமி என்ற ராஜா (25) என்பது தெரியவந்தது. அரிகேசவநல்லூரில் 2012-ம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ராஜா, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு மதுகுடிக்க தருவை பகுதிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இது குறித்து வழக்குப்பதிந்த போலீஸார், சீனியாபுரத்தைச் சேர்ந்த ராஜவேல் என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai