சுடச்சுட

  

  திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, கிங்ஸ் கம்யூனிட்டி கேர் டிரஸ்ட் மற்றும் மதர் தெரசா கேன்சர் ஹெல்த் சென்டர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை குறித்த ஆலோசனை வழங்கும் முகாம் திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு டிரஸ்ட் நிறுவனர் எம். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழித்திரை கண் புற்று குறித்து ஹெல்த் சென்டர் ஒருங்கிணைப்பாளர் எம்.ஹென்றி ராஜன் கூறியதாவது: நமது நாட்டில் பலருக்கும் புற்று நோய்  குணப்படுத்த முடியாத நோய் என்ற தவறான கருத்தே உள்ளது.

  நோயாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் நம்பிக்கை தரும் புற்றுநோய் சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளிலேயே அதிகரித்துவிட்டன. உலகமெங்கும் புற்றுநோயின் அனைத்து அம்சங்களும் மிக விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன. நோயின் தன்மை,  தீவிரம், பிரச்னைகள் மற்றும் அதற்கு தகுந்த சிகிச்சை முறைகளை கண்டறிந்து பலரும் குணமடைந்து வருகின்றனர். கண் விழித்திரை புற்று நோய் என்பது வைட்டமின் சி குறைபாடு காரணமாகவே வருகிறது.

  குழந்தைகளுக்கு கீரை வகைகள், காய்கனிகள், நெல்லிக்காய் உள்ளிட்ட இயற்கை உணவுகளை கொடுத்து வந்தால் விழித்திரை புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை வாடிக்கையாக்க வேண்டும். நார்ச்சத்து மிக்க உணவுகள், உடற்பயிற்சி மூலம் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம் என்றார் அவர். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai