சுடச்சுட

  

  அம்பாசமுத்திரத்தில் டாக்டர் அருள், அவரது மனைவி வெட்டிக்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 200- க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் போலீஸாரால்  கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

  அம்பாசமுத்திரம் தெற்கு மாடத் தெருவில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவரான அருள், அவரது மனைவி ஜான்சிராணி ஆகியோர் டிச. 1-ஆம் தேதி மர்மமான முறையில்  கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை கொலையாளிகள் யாரும் பிடிபடவில்லை.

  இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, காவல்துறை உயர் அதிகாரியை சந்தித்து இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

  இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் புறநகரில் இயங்கிவரும் 155 தனியார் மருத்துவமனைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மருத்துவமனைகளுக்கு 2 காவலர்கள் தினமும் சென்று  கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புறநகரில் இப்பணி திங்கள்கிழமை தொடங்கியது.

  திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai